நேரம்

 நேரம் குறித்து ஒரு பிரசங்கம்.


நண்பர்களே,


நேரமில்லை அல்லது பொழுது போகவில்லை. இந்த இரண்டில் ஒன்றை தான் நிறைய பேர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நமது நேரத்தை பிறரிடம் அடகு வைத்தால் இப்படித்தான்.


நேரம் என்பது ஆக்சிஜன், தண்ணீர் போல இயற்கை இலவசமாக உங்களுக்கு வழங்கியிருக்கிறது. வேலை செய்யும்போது மற்றவர்கள் உங்கள் நேரத்தை ”கட்டுப்படுத்த” அனுமதிக்கிறீர்கள். வேலை செய்யாதபோது டி.வி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களிடன் உங்கள் நேரத்தை ”கரைக்க” அனுமதி கொடுக்கிறீர்கள். ஆக மொத்தம் எப்போதும் அடமானத்தில் இருக்கிறது உங்கள் நேரம்.


தண்ணீரை காற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். ஆனால் நேரம்??


நான் இப்போது நேரத்தை அடகு வைக்காத ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நேரத்தை ப்ரொடக்டிவாக பயன்படுத்தி பணமாக மாற்றும் கழைக்கூத்திலிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறேன்.


எனது நேரத்தை நான் தான் தீர்மானிக்கிறேன். இன்று ஒரு நாளை எடுத்துக்கொண்டால் டிசைன் வேலைகள் இருக்கிறது. காலையில் குழந்தைகளை ஸ்கூலில் விட்டு விட்டு, வானகரம் போய் மீன் வாங்கி வந்தேன். கிச்சனில் மனைவிக்கு உதவியாக மீனை கழுவி வைத்தேன். கொஞ்சம் முருங்கைக் கீரை ஆய்ந்தேன். நேற்று இரவு செய்த அட்வெர்டைசிங் டிசைன்களை செக் பண்ணி ஒரு கிளையண்டுக்கு மெயில் பண்ணினேன். இதற்கு இடையே ஃபேஸ்புக்கில் நாலு போஸ்டுகளையும் போட்டிருக்கிறேன். இன்னும் சில வேலைகள் லைனில் நிற்கிறது. ராஜா பாடல்களை கேட்டவாறு இதை டைப் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அகிரா ஓவியத்தை வேறு ஃப்ரேம் பண்ணக்கொடுக்க போகவேண்டும். வாட்டர் கலர் வேறு வா வா என்று அழைக்கிறது. மதியம் சாப்பிட்டு விட்டு தூக்கம் வந்தால் ஒரு குட்டித்தூக்கம் போடலாம். இந்த நேரத்தில் வெளியே உலகம் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனது பராக்கிரமங்களை சொல்வதற்காக இதை சொல்ல வில்லை.


எல்லோராலும் இப்படி இருக்க முடியும். ப்ரொடக்டிவிடி, பணம் பற்றிய ஓவர் கால்குலேஷன்கள் இல்லாமல் இருந்தால், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற வெறி இல்லாமல் இருந்தால். முன்னால் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் கேரட்டை கழற்றி எறிந்து விட்டால்.


ஆகவே நண்பர்களே. உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தை நீங்கள் பயன்படுத்துங்கள். வெட்டியாக இருப்பதும், மகிழ்ச்சியாக வேலை செய்வதும் நமது உரிமை.

Source:Facebook 

Santhosh Narayanan

Comments

Popular posts from this blog

Make Excellence a Habit

பணிவு

Loosers