பிசாசின் தந்திரம்
*ஆபாச படத்தில் - பிசாசின் தந்திரம்* 👻 இன்றைய காலத்தில் வாலிபர்கள்,சிறுவர்கள் , ஆண்/பெண் , திருமணமானவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் , இரட்சிக்கப்படாதவர்கள், ஊழியர்கள் , விசுவாசிகள், பெரியபதவியில் இருப்பவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் அடிமையாக இருக்கக்கூடிய பாவம் இது.. சிலர் இதை பாவம் என்றும் தெரிந்தும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் அடிமையாக உள்ளனர். இன்னும் சிலர் இதேல்லாம் பாவம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இந்த படங்களை துனிகரமாக பார்க்கின்றனர். இதற்கு பின்னால் *பிசாசின் மிகப்பெரிய தந்திரம்* உள்ளது. இத்தந்திரம் என்ன என்பதனை இந்த செய்தியில் தியானிப்போம் . ஜெபத்தோடு வாசியுங்கள் ஆவியானவர் உதவி செய்வார். காண்டாமிருகத்திற்குக்கொப்பான பெலனை கொண்ட இஸ்ரவேல் மக்கள்(தேவனுடைய பிள்ளைகள் ) (எண்ணாகமம் 23:22) எகிப்திலிருந்து கானானுக்கு செல்லும்போது அவர்களை எப்பட...