வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉
வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉
வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
கொலோசெயர் 3 :22
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சசையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்திரத்தில் பங்கடைவான்.
நீதிமொழிகள் 17:2
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழிகள் 22:29
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து,எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
கொலோசெயர் 3 :23,24,25
1 பேதுரு 2:18
வேலை ஸ்தலத்தில் நம்மை விட மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு *கீழ்படிய* வேண்டும்
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்*; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
ரோமர் 13:1-2
வீட்டிலும், வேலை ஸ்தலத்திலும் "சாட்சி " யாக இருப்பதே அவசியம்
Comments
Post a Comment