வாயும் வார்த்தைகளும்
_வாயும் வார்த்தைகளும்_
*மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.* (மத்தேயு 12:36)
*தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.*
*பரிசுத்த வேதம் போதிக்கும் "பேசக்கூடாத பேச்சுகள்"*
1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது
- யாக் 3:5
2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 சாமு 2:3
3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 சாமு 2:3
4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 75:4
5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது
- மத் 5:37
6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது
- 1 தீமோ 4:7
7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது
- மத் 12:36
8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 15:1
9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாத - நீதி 27:2
10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது - நீதி 20:6
11. தீமையை பேசக் கூடாது
- யோபு 27:3
12. துர்ச் செய்தியை பேசக்கூடாது
- எண் 13:33
13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
- எபேசி 5:4
14. புத்தியீனமானவைகளை பேசக்கூடாது
- எபேசி 5:4
15. யாரையும் பரியாசம் பன்னி பேசக்கூடாது
- எபேசி 5:4
16. யாரையும் சபித்தல் கூடாது - யாக் 3:10
17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 12:18
18. இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- யூதா:16
19. கோள் செல்லுதல் கூடாது
- லேவி 19:16
20. நாவினால் புறங்கூறுதல் கூடாது
- சங் 15:3
21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது
- யோபு 15:3
22. தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது
- யோபு 15: 3
23. கபடான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 120:2, 3
24. கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 94:4
25. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 64:4
26. தகாத காரியங்களை பேசக்கூடாது
- 1 தீமோ 5:13
27. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது
- ரோ 2:1
28. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 தெச 2:5
29. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 29:20
30. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது
- 2 பேது 2:3
31. விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது
- 3 யோ :10
32. மாயையைக் குறித்து பேசக்கூடாது
- சங் 144:8
33. ஆகாத சம்பாஷணைகள் கூடாத
- 1 கொரி 15:33
34. பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 63:11
35. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 54:4
அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?
*கர்த்தர் செய்த அதியசங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.*
- 1 நாளாகமம் 16:9
*பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;*
- சகரியா 8:16
*பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.*
- எபேசியர் 4:29
Comments
Post a Comment