முன்னேற்றம்
*தினமும் என்னை கவனி.* அன்பானவர்களே, கர்த்தருடைய மகா பெரிதான கிருபையால் *தினமும் என்னை கவனி* என்ற இந்த ஊழியத்தை கடந்த ஒரு வருடமாய் நடத்தி வந்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். கடந்த ஒரு வருடமாய் தினந்தோறும் தேவனுடைய வசனத்தையும், ஆவிக்குரிய சிந்தனைகளையும், பிரசங்க குறிப்புக்களையும் ஒவ்வொரு நாளும் ஆயத்தம் செய்யவும், அவைகளை அநேகருக்கு அனுப்பவும், அநேகர் இதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட உதவி செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள்.🙏 இதுவரை அவருடைய கிருபையால் வழி நடத்தின தேவன் இனிவரும் நாட்களிலும் நம்மை வழிநடத்துவாராக. உங்களுடைய ஜெபங்களில் இந்த ஊழியத்துக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.🙏 இந்த நாளிலும் தேவன் நமக்கு கொடுத்த வார்த்தையை தியானிக்கலாம். *வாழ்க்கையில் முன்னேற நான்கு திறவு கோல்கள்.* 👉 இன்றைக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வரவிரும்பியும் எவ்வளவோ முயற்சி செய்தும் முன்னுக்கு வர முடியாமல் அலசடிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 👉 எவ்வளவோ போராடியும் முடியாமல் தங்களையே தாங்கள் நொந்துகொண்டு சோர்ந்து போய் இருக்கிறார்கள். 👉 படி படி என்று எவ்வளவவோ என் பெற்றோ